Friday, January 30, 2015

காமாக்ஷி!கடாக்ஷி !



காமாக்ஷி!கடாக்ஷி !


மோதகப் பொன்மணியுண்டதும்  காஞ்சியில்
ஆடகம் பொழிந்த  காமாக்ஷி !
பாதமலர்தனில்  இப்பாமலரிடும்
பேதையேனையும் நீ கடாக்ஷி!

மதனை எரித்த   அரனை  வரித்து
மதுரையில் மணந்த மீனாக்ஷி ! 
பாதமலர்தனில்  இப்பாமலரிடும்
பேதையேனையும் நீ கடாக்ஷி!

அன்னபூரணியாய்  அரனுக்கு அன்னமிடும்  
அன்னையே!காசி விசாலாக்ஷி !
பாதமலர்தனில்  இப்பாமலரிடும்
பேதையேனையும் நீ கடாக்ஷி!


காயாரோஹணருடன்  நாகையிலருளும் 
நாயகியே !நீலாயதாக்ஷி !
பாதமலர்தனில்  இப்பாமலரிடும்
பேதையேனையும் நீ கடாக்ஷி!


நன்றி :அமரர் கணபதியின் ,"காமாக்ஷி !கடாக்ஷி !"


3 comments:

  1. காமாக்ஷி, எங்களை நீயேதான் கடாக்ஷிக்கணும்... அருமை அம்மா.
    சுப்பு தாத்தா பாடியதையும் ரசித்தேன். நன்றி தாத்தா!

    ReplyDelete
  2. அழகான வரிகள்
    மிக்க நன்றி அம்மா!

    ReplyDelete
  3. [1] சுப்புசார் ! பல ராகங்களில் என் பாட்டைப்பாடி அசத்தியதற்கு நன்றி .

    [2] கவிநயா ! பாட்டை ரசித்துப் பின்னூட்டியதற்கு நன்றி .

    [3] ஷைலன் ! பாட்டை வாசித்துப் பின்னூட்டியதற்கு நன்றி .

    ReplyDelete