Monday, September 2, 2013

குறையெதும் இல்லையடி!





சுப்பு தாத்தா அடானாவில் பாடி அசத்தியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள்!


கனிமுகங் காண வந்தேன் கற்பகமே
பனிமலர்ப் பதம் அருள்வாய் அற்புதமே
(கனிமுகம்)

அரையினில் அரவணிந்த சங்கரனின் பங்கு கொண்டாய்
பிறைமுடி சூடிக் கொண்டு பித்தனுடன் கூடிக் கொண்டாய்
கறைக்கண்டன் மனையெனவே இடப்புறம் இருப்பவளே
வரையெதும் இல்லாமல் கருணையைப் பொழிபவளே!
(கனிமுகம்)

மறைகளின் மறைபொருளே மாதவரில் மாமணியே
நிறைமதி முகத்தவளே நித்தம்தொழும் நித்திலமே
குறையெதும் இல்லையடி கோதையுன்னை நினைத்த பின்னே
பறைதர வேணுமடி பிள்ளையெனைக் காத்திடவே!
(கனிமுகம்)


--கவிநயா

8 comments:

  1. கனிமுகங் காண வந்தேன் கற்பகமே
    அற்புதமான பாடல் ..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா!

      Delete
  2. அட, உங்களை இந்தப் பக்கம் பார்த்ததில் மகிழ்ச்சி, திவாஜி :) நன்றி!

    ReplyDelete
  3. "பறைதர வேணுமடி பிள்ளையெனைக் காத்திடவே".....thanks to kavinaya & subbusir .

    ReplyDelete