Thursday, February 7, 2013

இசையின் எழிலுருவே!



இசையின் எழிலுருவே!

ஏழுசுர இசையின் எழிலுருவே !உமையே!
"வாழி நீ!"என வாழ்த்தி வணங்குகிறோம் உனையே.

சகலகலாவல்லி!சர்வாணி!சிவானி!
சட்ஜம சங்கீத சுக சாகரம் நீ !
ரிசபேசன் ரமணி!ரஞ்சனி!ருத்ராணி!
ரிதனில் ரீங்காரம் செய்திடும் ராகினி!
வாழி நீ!வாழி நீ!வாழி நீ!வாழி நீ!

கஜமுக ஜனனி!கௌரி!காத்யாயினி!
காந்தார சுரத்தின் கானாம்ருதம் நீ!
மாதங்கி!மதசாலினி!மனோன்மணி!
மத்யமசுரமதன் மங்கலகீதம் நீ!
வாழி நீ!வாழி நீ!வாழி நீ!வாழி நீ!

பவதாரிணி!பஞ்சபாணி!பவானி!
பஞ்சமம் பொழியும் பண்களின் இனிமை நீ!
தர்மசம்வர்த்தினி! தேவி !தாக்ஷாயினி!
தைவத சுரந்தரும் தேமதுர தொனி நீ!
வாழி நீ!வாழி நீ!வாழி நீ!வாழி நீ!

நிதம் நினைவினில் நிறை நித்ய கல்யாணியே !
நிஷாதம் நல்கிடும் நல்லிசை நாயகியே !
ஏழுசுர இசையின் எழிலுருவே !உமையே!
"வாழி நீ!"என வாழ்த்தி வணங்குகிறோம் உனையே





.http://youtu.be/dw-8fBf0NUE



3 comments:

  1. பாட்டு நன்றாக உள்ளது லலிதம்மா.
    Sorry I could not write well in Tamil. I came across this site when I search for Amman songs and became fan of this site. I just start to read all of your songs.

    ReplyDelete
  2. கலா அவர்களின் குரலில் மிக இனிமை அம்மா. 'சரிகமபதநி' என்ற முதலெழுத்துக்களில் தொடங்கி, அன்னையின் நாமங்கள் அழகாக வருமாறு அமைத்திருப்பது மிகவும் அருமை! நன்றி லலிதாம்மா.

    ReplyDelete
  3. Thanks kavinaya.I was very much impressed by the lyrics of Lalitha that I decided to sing.
    Kala

    ReplyDelete